மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு - திரிணாமுல் காங். கட்சியினரின் அதிருப்தி பாஜகவிற்கு சாதகமாக அமையுமா ?

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் கட்சியின் மீது எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.

Update: 2021-03-08 10:59 GMT
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 296 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பட்டுள்ளது.இதில் பல்வேறு காரணங்களால் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 27 உறுப்பினர்கள் மற்றும் சில அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நபர்களில் ஒருவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஷிபுர் தொகுதி எம்.எல்.ஏ ஜாத்து லஹிரி.ஜாத்து லஹிரிக்கு பதிலாக அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் கட்சியில் இருந்து விலகியுள்ள ஜாத்து லஹிரி, தாம் பாஜாகவில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைபோல் பங்கார் தொகுதியில் போட்டியிட கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அரபுல் இஸ்லாமுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இத்தனைக்கும் அரபுல் இஸ்லாம் மம்தா பானர்ஜியின் நெருக்கமான நம்பிக்கைக்குரியவராகவும், கட்சியின் முக்கிய தலைவராகவும் பார்க்கப்பட்டவர்.மேலும், அம்தங்கா தொகுதியில் போட்டியிட்ட இரண்டு முறை எம்எல்ஏவான ரஃபிகுர் ரகுமானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதேபோல தற்போது எம்எல்ஏ வாக இருக்கும் சொனாலி குஹாவுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு நேரலையின் போது அவர் கண்ணீர் விட்டு அழுதார்.இப்படி அதிருப்தியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பலரும் பாஜகவில் இணையக்கூடும், அல்லது கட்சிக்குள் உள்ளடி வேலைகள் நடக்க கூடும் என சர்ச்சை எழுந்துள்ளது.ஏற்கனவே மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கும், திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் போட்டி நிலவி வரும் சூழலில், இது பாஜகவிற்கு சாதகமாக அமையுமா என்பதை தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே தெரியவரும்


Tags:    

மேலும் செய்திகள்