"தமிழர்களின் நண்பன் பாஜக- எதிரி காங்." - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி

தமிழர்களின் நண்பன் பாஜக தான் என, தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-19 09:54 GMT
தமிழர்களின் நண்பன் பாஜக தான் என, தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை அவர் இன்று சந்தித்து பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, இரட்டை இலக்க உறுப்பினர்களை பேரவைக்கு அனுப்பும் என்றார். காங்கிரஸ் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருந்தது என்றும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அதனை நடத்துவது பாஜக அரசு தான் என்றும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்