சென்னையில் ஜெயலலிதா உருவச்சிலை திறப்பு

தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ஜெயலலிதா சிலையை, முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

Update: 2021-01-28 09:28 GMT
தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ஜெயலலிதா சிலையை, முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். ஜெயலலிதா பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த வளாகத்தையும், அதன் உள்ளே 12 அடி உயர பீடத்தில் 9 அடி உயரத்திலான ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற விழாவில், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஆளில்லா விமானம் மூலம்  முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி, ஜெயலலிதா சிலையை திறந்து வைக்க,  5 ஆளில்லா விமானங்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்