மத்திய பிரதேச விவசாயிகள் மாநாட்டில் பேசுகிறார் பிரதமர் மோடி - 23 ஆயிரம் கிராமங்களில் ஒளிபரப்ப மாநில அரசு திட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வலுத்து வரும் நிலையில் மத்திய பிரதேச விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பேசுகிறார்.

Update: 2020-12-18 05:27 GMT
மத்திய பிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 23 ஆயிரம் கிராமங்களில் அவருடைய பேச்சை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ரைசானில் இருந்து கலந்துக் கொள்கிறார். இந்நிகழ்ச்சியின் போது பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 35 லட்சம் விவசாயிகளுக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுகிறது. மாநிலத்தில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் சொந்த மாவட்டமான மொரேனாவில், நேற்று விவசாயிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணியை தொடங்கினர். இந்நிலையில், அம்மாநில விவசாயிகளிடம் பேசும் பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களின் பலன்களை விளக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்