வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

Update: 2020-07-27 11:19 GMT
டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கோபால் ராய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இணையதளத்தை தொடங்கி வைத்து பேசிய, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் 2-ஆம் கட்ட ஊரடங்கு தேவையில்லை என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்