ராஜீவ் காந்தி கொலை வழக்கு - 7 பேரின் விடுதலை தீர்மானம் - ஆளுநர் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது 2 ஆண்டுகளாக, ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Update: 2020-07-22 11:46 GMT
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். புழல் சிறையில் 50 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதற்கு நீதிபதி கிருபாகரன் அதிருப்தி தெரிவித்தார். மேலும், ஏழு பேரின் விடுதலை தொடர்பாகவும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது தொடர்பாகவும் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி நீதிபதிகள், வழக்கை ஜூலை 29 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்