முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு பயணம் : மு.க. ஸ்டாலின் விமர்சனத்துக்கு ஜெயக்குமார் பதிலடி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொடர் சாதனைகளை கண்டு விரக்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சிப்பதாக , அமைச்சர் ஜெயகுமார் குற்றஞ் சாட்டியுள்ளார்.

Update: 2019-08-29 18:34 GMT
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 87 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த ஆண்டு நடந்த இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் பல , சீனா மற்றும் ஐரோப்பியாவில் இருந்து வெளியேறும் சூழலில் , அந்த நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வரும் தொலைநோக்கு சிந்தனையுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வெளிநாடு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். நல்ல நோக்கத்திற்காக வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை  ஸ்டாலின் விமர்சிப்பது அவரது பதவிக்கு அழகல்ல என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்