"தாய்மொழியில் பதவியேற்ற எம்பிக்களுக்கு நன்றிகள்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலத்திற்கான பட்ஜெட் ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-19 10:47 GMT
புதுச்சேரி மாநிலத்திற்கான பட்ஜெட் ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி, மணக்குள விநாயகர் ஆலயத்தில் ராகுல் காந்தியின் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தஙகத்தேர் இழுத்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, தமிழ் மொழியில் பதவியேற்ற எம்பிக்களுக்கு தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்