மோடி பதவியேற்பு விழா : டெல்லியில் குவியும் வெளிநாட்டு தலைவர்கள்
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் டெல்லி வந்த வண்ணம் உள்ளனர்.;
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் டெல்லி வந்த வண்ணம் உள்ளனர். பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் ஆகியோரை டெல்லி விமானநிலையத்தில் வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே வரவேற்றனர். இவர்கள் தவிர, பிம்ஸ்டெக் அமைப்பில் இடம்பெற்றுள்ள வங்கதேச அதிபர் முகமது அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறிசேனா, நேபாள பிரதமர் ஷர்மா ஓளி, மியான்மர் அதிபர் யூவின் மையின்ட், தாய்லாந்து அமைச்சர் க்ரிசாடா மற்றும் கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவ் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு, மோடி அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.