சூடானில் கொடூரம் - பஞ்சத்தால் வாடிய 1,000 பேர் படுகொலை?
உள்நாட்டு போரால் சூடானின் டார்பூர் பகுதியில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த முகாமை துணை ராணுவ குழு கைப்பற்றிய போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் தப்பியோட முயன்ற 300க்கும் மேற்பட்ட மக்கள் தூக்கிலிடப்பட்டதாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.