தனியார் பள்ளிகளுக்கு இயக்குனர் சுற்றறிக்கை
தனியார் பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கம் மற்றும் நல்லிணக்கம் அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டும் என, தனியார் பள்ளிகள் இயக்குனர் குப்புசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சாதி அல்லது சமூக வேறுபாடுகள் இன்றி நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாணவர்களை உடல் அல்லது மன ரீதியாக எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்றும், பள்ளி வளாகங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.