Harassment Case || மனநிலை பாதித்த பெண் பாலியல் வன்கொடுமை - அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சேம் ரிபெத் என்பவருக்கு, இரட்டை ஆயுள் தண்டனையும், கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி லதா உத்தரவிட்டார்.