லிங்கை கிளிக் செய்தால் அரசின் முப்பதாயிரம் ரூபாய் உதவி தொகை கிடைக்கும் என்ற குறுஞ்செய்தியை தொட வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருவதால், இது போன்ற தகவல்களை மோசடி கும்பல் பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் தொழில்நுட்ப விழிப்புணர்வு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.