கமலுக்கு நிபந்தனை முன் ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்ஹாசனுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.;

Update: 2019-05-20 06:52 GMT
நான்கு தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட மக்கள் நீதிமய்யம் தலைவர், அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளபட்டியில் பேசும்போது, காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு இந்து என்று கூறினார். இந்து என்று பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், பிரதமர் மோடி வரை விளக்கமளித்தார். இதனிடையே, சர்ச்சையாக பேசிய கமல்ஹாசன் மீதும், கட்சி மீதும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் முதல், உள்ளூர் காவல் நிலையங்கள் வரை புகார்கள் குவிந்தன. இதனை எதிர்கொள்ளும் விதமாக கமல்ஹாசன் சார்பில், முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இரண்டு பேர் ஜாமீன் வழங்கவும், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க ஜாமினும் அளிக்க உத்தரவிட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இது கமல் தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்