தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களவை குழு தலைவர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழியன், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி ராஜா இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல் எம்.எல்.ஏ தமிழரசி, முன்னாள் எம்.பி எம்.எம்.அப்துல்லா, திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ,
சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவ சேனாபதி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநல சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொதுமக்களை சந்தித்து கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கையை தயாரிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.