உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்களுக்கு பிடித்த இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் ராஜமவுலி ஆகியோர் அவதார் -FIRE AND ASH படம் பற்றி கலந்துரையாடினர்..
அப்படத்தை திரையரங்கில் பார்த்து விட்டு ஒரு குழந்தையாகவே மாறி குதூகலித்ததாக ராஜமவுலி தெரிவித்தார். ஐதராபாத்தில் அவதார் திரைப்படம் ஒரு வருடம் ஓடியதாக நினைவுகளை பகிர்ந்த அவர், பெரிய திரை அனுபவங்களுக்கு அவதார் ஒரு மைல்கல் என கேமரூனை பாராட்டினார். மேலும் ராஜமவுலியின் வாரணாசி திரைப்படத்தில் பணியாற்ற கேமரூன் விருப்பம் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.