அதிகாரத்தை திரும்ப பெறுவாரா பிரதமர் மோடி? : நான்கு வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி...

சுமார் 90 கோடி வாக்காளர்களை கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்தியாவில் அடுத்த பிரதமர் என்ற அங்கீகாரத்தை அலங்கரிக்க, நான்கு வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2019-04-04 08:53 GMT
அதிகாரத்தை திரும்ப பெறுவாரா பிரதமர் மோடி?

அதிகாரத்தை திரும்ப பெறுவதற்காக பலம் வாய்ந்த கூட்டணியுடன் களம் காண்கிறார் பிரதமர் மோடி. ஆர்.எஸ்.எஸ்., முதலமைச்சர், குஜராத் கலவரம், பிரதமர் என அவர் கடந்து வந்த பாதை.

பிரதமர் பரம்பரையின் அடுத்த வாரிசு...

எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தியும், பிரதமர் மோடிக்கு சவால் விடும் விதமாக வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளார். நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி என பிரதமர்கள் குடும்ப பிண்ணனி கொண்ட ராகுல் காந்தி, அந்த பட்டியலில் இடம் பெற துடித்துகொண்டிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு அரசியலில் ராகுல் காலடி எடுத்து வைத்த‌து முதல், காங்கிரஸ் தலைவரானது வரை அவர் கடந்து வந்த பாதை.

மோடிக்கு சவால் விடும் ம‌ம்தா பேனர்ஜி...

மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான ம‌ம்தா பானர்ஜியும் இந்த பட்டியலில் தவிர்க்க முடியாதவர் ஆகிறார். அண்மைமையில் பா.ஜ.கவிற்கு எதிராக ம‌ம்தா தலைமையில் 23 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டம், அவரது பலத்தை பிரபலப்படுத்தியது. ஏழை ஆசிரியர் குடும்பத்தில் பிறந்து 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆண்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு சவால் விடுத்த ம‌ம்தா, தற்போது பிரதமர் பதவி வேட்பாளர்களுக்கு சவால்விடுக்க தயாராகி வருகிறார். 

மோடிக்கு சவாலாக இருப்பாரா மாயாவதி?

தாழ்ந்தப்பட்ட இன மக்களின் அரசியாக பார்க்கப்படும் மாயாவதியும் ஒருபுறம் பிரதமர் மோடிக்கு சவால்விடுக்கும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான மாயாவதி, பிரதமர் ஆகிறாரோ இல்லயோ... பிரதமரை உருவாக்கும் சக்தியாக மாயாவதி இருக்கிறார் என்று அரசியல்விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்