திமுக கூட்டணி - யாருக்கு எந்த தொகுதி?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கி உள்ளது.

Update: 2019-03-06 04:09 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கி உள்ளது. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி மற்றும் மாநிலங்களவையில் ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது.  முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியை தி.மு.க. ஒதுக்கி உள்ளது. 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள நிலையில், எஞ்சியுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.



Tags:    

மேலும் செய்திகள்