Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.12.2025) | 1 PM Headlines | ThanthiTV
- எத்தியோப்பியா நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்... எத்தியோப்பியா விடுதலைக்காக இந்திய வீரர்கள் போராடியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்...
- கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சதவீதத்தை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது... காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...
- தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது... கூட்டணி குறித்து முடிவு எடுக்க, ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கி இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...
- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நான்காவது நாளாக விசாரணைக்கு வந்தது... தனி நீதிபதியின் உத்தரவால் பொது அமைதி சீர்குலையவில்லை என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது...
- குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்கக்கோயிலுக்கு வருகை தந்துள்ளார்... திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த குடியரசு தலைவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ளது....