ஆணையத்தில் சொன்னதை வெளியில் சொல்ல விரும்பவில்லை - தம்பிதுரை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜரானார்.;

Update: 2019-01-22 11:05 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜரானார். ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆணையத்தில் கூறிய விவரங்களை தெரிவிக்க இயலாது என்றார். தொடர்ந்து கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகே, கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்