அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் திறந்து வைத்தனர்.;

Update: 2018-11-14 04:56 GMT
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை குறித்து பல்வேறு சர்ச்சை, விமர்சனங்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து புதிய சிலை உருவாக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் புதிய சிலையை இன்று முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், சிலையை வடிவமைத்த தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த சிற்பி ராஜ்குமாருக்கு முதலமைச்சர் பழனிசாமி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். தற்போது, நிறுவப்பட்டுள்ள வெண்கல சிலை 8 அடி உயரம் 800 கிலோ எடை கொண்டதாகும். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்