"தீவிரவாதத்தை ஆதரிப்பது குற்றமே" - 7 பேரை விடுதலை செய்ய காங்., கடும் எதிர்ப்பு

பேரறிவாளன் உள்பட 7 பேரை அதிமுக அரசுடன் பாஜக இணைந்து தாங்கள் நியமித்த ஆளுநர் மூலம் விடுவிக்க முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

Update: 2018-09-10 18:30 GMT
பேரறிவாளன் உள்பட 7 பேரை அதிமுக அரசுடன் பாஜக இணைந்து தாங்கள் நியமித்த ஆளுநர் மூலம் விடுவிக்க முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை திட்டமிடப்பட்ட தீவிரவாத செயல் என்றும், தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதத்தை ஆதரிப்பது குற்றமே என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரும் தங்களுக்கு எதிரிகள் இல்லை என ராஜிவ் காந்தி குடும்பத்தினர் பலமுறை தெளிவுபடுத்தி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.  இருப்பினும், தீவிரவாதத்திற்கு எதிராக பணியாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாகவும்  அதிலிருந்து அரசு தவறி விடக் கூடாது எனவும் ரன்தீப் சுர்ஜீவாலா கேட்டுக்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்