18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு - மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதம்

தேர்தல் ஆணையம் கட்சியையும், சின்னத்தையும் முடக்கியிருந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும் என மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2018-08-16 11:46 GMT
சென்னை உயர்நீதிமன்றத்தில், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு,  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அ​ப்போது  18 பேர் சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் மோகன் பராசரன், சபாநாயகரின் நடவடிக்கையை நியாயப்படுத்தி, அவர் தரப்பிலும், முதல்வர் தரப்பிலும், கொறடா தரப்பிலும் முன் வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதிலளித்தார்.கட்சியையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம், முடக்கியிருந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். சபாநாயகரை விட அதிக அதிகாரத்தை உடைய தலைமை தேர்தல் ஆணையர் அதிமுகவை முடக்கி பிறப்பித்த உத்தரவு நிலுவையில் உள்ள போது  தகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்றும்  மோகன் பராசரன் வாதிட்டார். கட்சி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை, தாமாக முன் வந்து கட்சியில் இருந்து வெளியேறியவர்களாக கருத முடியாது என்றும், கட்சி தான் பிரதானமே தவிர கட்சித் தலைமை அல்ல  எனவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களில் நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாது என்றும் அவர் வாதிட்டார். மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் தமது, வாதத்தை நிறைவு செய்ததை அடுத்து,  அவர்கள் சார்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நாளை வாதிடுகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்