உலக அளவில் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #RahulGandhi

மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிறகு #NoConfidenceMotion மற்றும் #RahulGandhi உலக அளவில் ட்ரெண்ட் ஆகிறது.

Update: 2018-07-20 11:38 GMT
நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்று வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் உலகளவில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசிய பேச்சும், அதனை தொடர்ந்து அவர் மக்களவையில் நடந்து கொண்ட விதமும் அதிகளவில் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில், இந்திய அரசியல் களத்தில் நடைபெற்று வரும் இந்த  மிக முக்கியமான இந்த நிகழ்வுகள் உலக அளவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதையே இது காட்டுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்