51வது பிறந்த நாளைக் கொண்டாடும் "மாஸ்டர் பிளாஸ்டர்" சச்சின்... மலைக்க வைக்கும் சச்சினின் சாதனைகள்..."பேட்டிங் லெஜெண்ட்"- குவியும் பிறந்த நாள் வாழ்த்துகள்

Update: 2024-04-24 06:39 GMT

கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... மாஸ்டர் பிளாஸ்டர் என ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் 1989ல் தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராகக் களமிறங்கி, சர்வதேச போட்டியில் விளையாடிய இளம் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற புகழைப் பெற்றார். 664 சர்வதேச போட்டிகள், 76 ஆட்டநாயகன் விருதுகள், 20 தொடர் நாயகன் விருதுகள், சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர், ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்தவர் என சச்சினின் சாதனைப் பட்டியல் வெகு நீளம்... தான் களத்தில் நிற்கும் வரை அரங்கில் சச்சின் எனும் மந்திரத்தை இடைவிடாது ஒலிக்கச் செய்தவர்... பேட்டிங் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளுக்கு உலகம் முழுவதிலும் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன...

Tags:    

மேலும் செய்திகள்