முல்லை பெரியாறு- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தவும். பராமரிப்பு பணிகளுக்கும் மரங்களை வெட்ட அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

Update: 2021-11-26 15:44 GMT
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தவும். பராமரிப்பு பணிகளுக்கும் மரங்களை வெட்ட  அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் டி. குமணன் தாக்கல் செய்துள்ள மனுவில் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை எடுத்து செல்ல தமிழகத்துக்கு அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தவும். பராமரிப்பு பணிகளுக்கும் மரங்களை வெட்ட  தமிழக அரசை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள வல்லக்கடவு- முல்லைப் பெரியார் காட்டுச் சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்,  கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி  முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவை அளவிடும் கருவிகளை பொருத்த கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்