மாநில அரசுகளுக்கு 44 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிதியை வழங்கியது மத்திய அரசு

ஜிஎஸ்டி இழப்பீடாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Update: 2021-10-28 14:31 GMT
கடந்த மே மாதம் நடைபெற்ற  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, கடன் ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு ரூ.1.59 லட்சம் கோடி கடன் பெற்று, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் வெளிச்சந்தையில் கடனாக பெறப்பட்ட இந்த தொகை மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகளை மேம்படுத்துதல், உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுதல் போன்ற பொது செலவினங்களை மாநிலங்கள் எதிர்கொள்ள இந்த இழப்பீடு தொகை உதவியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. 

தமிழகத்தின் பங்காக 2 ஆயிரத்து 240 கோடியே 22  லட்ச ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி,  வரி வசூலிப்பிலிருந்து ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் வழங்கப்படும் இயல்பான ஜிஎஸ்டி இழப்பீட்டுடன் கூடுதலாக வழங்கப்படும் நிதியாகும். 

Tags:    

மேலும் செய்திகள்