லித்தியம் அயர்ன் பேட்டரிகள் பற்றாக்குறை - பேட்டரிகளில் இயங்கும் மின்சார வாகனங்கள்

மின்சார வாகனங்கள் இயங்க தேவையான லித்தியம் ஐயான் பேட்டரிகளுக்கு இந்தியாவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-24 07:22 GMT
மின்சார வாகனங்கள் இயங்க தேவையான லித்தியம் ஐயான் பேட்டரிகளுக்கு இந்தியாவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின்சார கார்கள் மற்றும் இதர வாகனங்கள், லித்தியம் அயான் பேட்டரிகளில் இயங்குகின்றன. இந்தியாவின் தேவைகள் முழுவதும்  சீனா, தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறன. 2020-21இல் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு இவை இறக்குமதி செய்யப்பட்டன. ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அதிகரித்துள்ளதால், இவற்றின் தேவை உலகெங்கும் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக லித்தியம் அயான் பேட்டரிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகள் 10 முதல்15 நாட்கள் வரை கால தாமதம் ஆவதாக ட்ரோன்டெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இறக்குமதிகளின் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் லித்தியம் அயான் பேட்டரிகளுக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. கார்களில் பொருத்தப்படும் கம்யூட்டர் சிப்களுக்கு
ஏற்கனவே பற்றாகுறை உள்ளது சிக்கலை அதிகரித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்