உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-10-20 02:41 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும்,  நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ள நிலையில், 5 பேர் மாயமாகி உள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்த உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, வெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாயும், வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என குறிப்பிட்டார். இதனிடையே வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கேட்டறிந்தனர். 

உத்தரகாண்ட் கனமழைக்கு 34 பேர் பலி - மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள்

இதனிடையே, நாகினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் 36 பேரை மீட்டுள்ளனர். நைனிடால் பகுதியில் ஒரு கடையில் இருந்து உள்ளே சிக்கியவர்களை ராணுவ வீரர்கள் மீட்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 


Tags:    

மேலும் செய்திகள்