3 நாள் பயணமாக இந்தியா வந்த டென்மார்க் பிரதமர் - டென்மார்க் ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமருடன் 4 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு டென்மார்க் அளித்து வரும் ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

Update: 2021-10-09 11:02 GMT
இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே பிரட்ரிக்செனை டெல்லியில் உள்ள ஹைதரபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருதரப்பு உறவு குறித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அந்நாட்டுடனான 4 புதிய ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது எரிசக்தி, உணவு பதப்படுத்துதல், தளவாட பொருட்களின் உட்கட்டமைப்பு போன்ற இந்தியாவின் உருவாக்குவோம் திட்டத்தில் டென்மார்க் நிறுவனங்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதாக மோடி குறிப்பிட்டார். சர்வதேச சோலார் கூட்டமைப்பில் டென்மார்க் இணைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்த மோடி, வேளாண் உற்பத்தியில் இருநாடும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக கூறினார். பதிலுக்கு எரிசக்தி துறையில் இந்தியாவின் ஒத்துழைப்பு விரும்புவதாக டென்மார்க் பிரதமர் மெட்டே தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்