டெல்டாவில் தொடரும் ஹைட்ரோ கார்பன் பணி - மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தகவல்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு ஓஎன்ஜிசி நிறுவனம் 6 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

Update: 2021-08-04 15:01 GMT
இது தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் வைகோ எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக 636 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்ததாக கூறி இருந்தார். அதில் பல்வேறு காரணங்களால் 329 கிணறுகள் கைவிடப்பட்டதாகவும், 129 கிணறுகள் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப காரணங்களினால் மூடப்பட்டதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தற்போது மொத்தம் 307 கிணறுகள் செயல்பாட்டில் உள்ளதாகவும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு ஓஎன்ஜிசி நிறுவனம் 6 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் பணியை மட்டுமே மேற்கொண்டு வருகிறது என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்