சபரிமலைக்கு பக்தர்கள் வருகை குறைவு - தேவசம்போடு அதிர்ச்சி

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு, முன்பதிவு செய்த பக்தர்கள் வருகையும் சரிந்ததால், தேவஸம்போர்டு கவலையில் ஆழ்ந்துள்ளது.

Update: 2021-07-20 08:49 GMT
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு, முன்பதிவு செய்த பக்தர்கள் வருகையும் சரிந்ததால், தேவஸம்போர்டு கவலையில் ஆழ்ந்துள்ளது. 

அய்யப்பன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக தேவஸம்போர்டு நிர்வாகம் கேரள அரசிடம் அனுமதிபெற்றது.  இதைத் தொடர்ந்து, கொரோனா நெகட்டிவ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதலுடன் ஆன்லைன் பதிவு மூலம், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆடி மாத பூஜைக்காக நடைதிறந்த நிலையில், 5 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைனில் அனுமதி அளித்த நிலையில், பக்தர்கள் வசதிக்காக 10 ஆயிரமாக உயர்த்தினர். ஆனால், நேற்று ஒரு நாளில் மட்டும் வெறும் ஆயிரத்து 849 பேர் மட்டுமே தரிசனம் செய்தனர். முன்பதிவு செய்த பக்தர்களில் பலர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அப்பம், அரவணை பாயாசம் ஆகியவற்றின் விற்பனை சரிவு மற்றும் வழிபாடு மூலம் கிடைக்கும் வருவாய் குறைவு ஆகியவற்றால், தேவசம்போர்டு,  பெரும் ஏமாற்றத்தில் உள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்