சொத்துக்காக நடந்த விபரீத சம்பவம் - தந்தையை தூக்கி வீசிய மகன்

சொத்துக்காக பெற்ற தந்தையை, வீட்டில் இருந்து மகன் தூக்கி வீசிய சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி இருக்கிறது....

Update: 2021-07-08 16:07 GMT
கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி திம்மய்யா. இவரது மகன் குமார். இவரின் மனைவி திவ்யா. குமார், கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே திம்மய்யாவின் பெயரில் உள்ள சொத்துக்களை குமாரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளுமாறு அவரது மனைவி கூறி வந்ததாக தெரிகிறது. மருமகளின் சூழ்ச்சியை அறிந்த திம்மய்யா, இதற்கு சம்மதிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திவ்யா, தனது மாமனாருக்கு சரியாக உணவு தராமலும், வீட்டிற்குள் சேர்க்காமலும் இருந்து வந்துள்ளார். இதையெல்லாம் பார்த்த அக்கம்பக்கத்தினர், திவ்யாயையும், குமாரையும் கண்டித்துள்ளனர். மேலும் திம்மய்யாவுக்கு ஆறுதல் சொன்ன அவர்கள், அவரை வீட்டிற்குள் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குமார், தந்தை என்றும் பாராமல் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே வீசியுள்ளார். இந்த சம்பவத்தை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அது இணையத்தில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக, குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்