புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு

புதிதாக மத்திய அமைச்சராக பொறுப்பேற்றவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

Update: 2021-07-07 19:53 GMT
புதிதாக மத்திய அமைச்சராக பொறுப்பேற்றவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற மன்ஷுக் மாண்டவ்யாவுக்கு சுகாதாரத்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவுத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அஸ்வினி வைஷ்ணவுக்கு ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையும், தர்மேந்திர பிரதானுக்கு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்