கோவாக்சின் வழங்க முடியாவிட்டால், கோவிஷீல்டு தடுப்பூசியை அதிக அளவு வழங்க வேண்டும் - மத்திய அரசிடம் டெல்லி மாநில அரசு கோரிக்கை

கோவாக்சின் வழங்க முடியாவிட்டால், கோவிஷீல்டு தடுப்பூசியை அதிக அளவு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் டெல்லி மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-05-17 03:44 GMT
டெல்லியில்  சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு செலுத்த  ஒரு நாளைக்கு மட்டுமே கோவாக்சின் தடுப்பூசியும்,  5 நாட்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பில் உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 45 வயது மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த போதுமான அளவு விரைந்து  வழங்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்  அதிஷு தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேறுபட்டி 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போதிய கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்க முடியாவிட்டால் கோவிஷீல்டு தடுப்பூசியை  அதிக அளவு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் டெல்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார். டெல்லியில் இதுவரை 34 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், பத்தரை லட்சம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்