வளமை பொங்கும் வசந்த காலம் - வசந்த காலத்தை வரவேற்கும் டெல்லி

வசந்த காலத்திற்காக, சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கு தயாராகிவிட்டது தலைநகர் டெல்லி.

Update: 2021-02-19 00:49 GMT
வசந்த காலத்திற்காக, சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கு தயாராகிவிட்டது தலைநகர் டெல்லி. இது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

தன் பெயரிலேயே தனி கவர்ச்சியைக் கொண்டு, உறைந்த நம் உள்ளங்களில் ஒரு வித கிளர்ச்சியை உண்டாக்கும்...  பச்சைப் பசேலென புற்கள்... புல் நுனியில் பனித்துளி... மலர்களின் வாசம்... பறவைகளின் ஓசை... இதமான வெயில்... அளவான குளிர் என்று தாலாட்டும் தென்றலோடு மிதந்து செல்லும் காலம் இந்த இளவேனிற்காலம். தலைநகர் டெல்லியில், சுற்றுலாவுக்கு உகந்த நேரமாகக் கருத்தப்படும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் தான் அங்கு  வசந்தகாலம் என்றழைக்கப்படுகிறது. குளிர்காலம் முடிந்து வெயில்காலம் தொடங்குவதற்கு முன்னதான இதமான காலம் தான் அது.

டெல்லியில் தற்போது வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில், நகரின் சராசரி வெப்பநிலை 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையே பதிவாகிறது. கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண வண்ணப்பூக்களின் மலர்ச்சி, வசந்த கால வருகையைப் பறைசாற்றும் மற்றொரு சாட்சி... தற்போது டெல்லியில் பசுமை தெரியும் இடங்களில் எல்லாம் பல வண்ண மலர்கள் மலர்ந்து விரிந்துள்ளன... இந்தப் பூக்கள் சோலைகளில் மட்டுமல்ல...டெல்லியின் சாலைகளிலும் ஒய்யாரமாய்க் காட்சியளிக்கின்றன...

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தில் பூத்திருக்கும் துலிப் மலர்கள் யாருக்கோ துயிலாமல் விழித்துக் கிடக்கின்றன... அதே போல, மாளிகையின் வெளியே ராஜ பாதை வழித்தடங்களிலும் பூக்கள் பூத்துக்குலுங்கும் காட்சி பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்