பெட்ரோல் டீசல் மீதான வரியை குறையுங்கள்" - மத்திய அரசுக்கு அ.தி.மு.க. எம்.பி. கோரிக்கை

பட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Update: 2021-02-10 12:32 GMT
பட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்,  நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள சிறிய அளவிலான மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த மத்திய அரசு நிதி உதவியை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். சாமானிய மக்களை அதிகம் பாதிக்கும் பெட்ரோல் டீசல் உயர்வை குறைக்க அவற்றின் மீது விதிக்கப்படும் அதிகளவிலான வரியை நீக்க வேண்டும் என்றும் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்தார்.


Tags:    

மேலும் செய்திகள்