2021ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 11.5%-ஆக இருக்கும் - சர்வதேச நிதி ஆணையம் கணிப்பு

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது.

Update: 2021-01-27 05:42 GMT
2021ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றி சர்வதேச நிதி ஆணையம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா ஊரடங்கில் இருந்து இந்திய பொருளாதாரம் பெருமளவில் மீண்டெழும் எனவும், சர்வதேச அளவில் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியை பெறும் ஒரே நாடாக இந்தியா இருக்கும் என கணித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2021ஆம் ஆண்டில் 11 புள்ளி 5 சதவீத வளர்ச்சியை இந்தியா பெறும் என கணித்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்தப்படியாக சீனாவில் 8 புள்ளி ஒரு சதவீதமும், ஸ்பெயின் 5 புள்ளி ஒன்பது சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்