பிரிட்டனில் பரவும் புதிய வைரஸ் குறித்து ஆராய்ச்சி - உலகில் முதல் முறையாக மரபணு தனியாக பிரித்தெடுப்பு

பிரிட்டனில் உருமாறிய பரவிவரும் புதிய கொரோனா வைரசின் மரபணுவை இந்திய விஞ்ஞானிகள் பிரித்தெடுத்து சாதனை படைத்துள்ளனர்.

Update: 2021-01-03 08:49 GMT
பிரிட்டனில் உருமாறிய பரவிவரும் புதிய கொரோனா வைரசின் மரபணுவை இந்திய விஞ்ஞானிகள் பிரித்தெடுத்து சாதனை படைத்துள்ளனர். இந்த வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவுதாக தெரிவிக்கப்பட்டதும் அதனுடைய மரபணு குறித்த ஆய்வு உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் உலகில் முதல் முறையாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வகை கொரோனா வைரஸின் மரபணுவை தனியாக பிரித்துதெடுத்துள்ளது. மராட்டிய மாநிலம் புனேவில் இருக்கும் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்