கேரளா போலீஸ் அகாடமி இணையதளம் முடக்கம்

கேரளா போலீஸ் அகாடமியின் இணையதளத்தை ஹேக் செய்யப்பட்டு காவல்துறையில் இருக்கும் கிரிமினல்களை அகற்ற வேண்டும் என குறுஞ்செய்தி பதிவிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-12-31 06:10 GMT
திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களுடைய குடிசையை அகற்றவந்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்ததில் உயிரிழந்தனர். இதனையடுத்து இருவரது சடலங்களையும் அவருடைய மகன் அப்பகுதியில் அடக்கம் செய்ய முயற்சித்த போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இவ்விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அம்மாநில போலீஸ் அகாடமியின் இணையதளத்தை ஹேக்கர்ஸ் முடக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள், நெய்யாற்றங்கரையில் பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் போலீசாருக்கும் இடையிலான வாக்குவாத புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். கேரளா சைபர் வாரியர்ஸ் என தங்களை அடையாளப் படுத்திக்கொண்டிருக்கும் ஹேக்கர்கள், காவல்துறையை சுத்தம் செய்ய அங்கிருக்கிருக்கும் கிரிமினல்களை அகற்றுங்கள் என தகவல் பதிவிட்டுள்ளனர். கேரளா காவல்துறையின் இணையதளத்தையே ஹேக்கர்ஸ் முடக்கியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்