கெஜ்ரிவால் வழக்கில் திடீர் ட்விஸ்ட். "வாக்குமூலங்கள் எதிராக இல்லை." ED - க்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Update: 2024-05-01 03:19 GMT

கைதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. பெறப்பட்ட 13 வாக்கு மூலங்களில் 11 வாக்குமூலங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக இல்லை என்றும், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நியாயமாக நடந்து கொள்ளவில்லை எனவும் கெஜ்ரிவால் சார்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள் தேர்தலுக்கு முன்னதாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதுடன், தனிமனித சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்து, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட தருணம் குறித்து அமலாக்கத் துறை சார்பில் மே 3ம் தேதி பதிலளிக்கத் தயாராக இருக்குமாறு உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்