"இனி நிரந்தரமாக வீட்டில் இருந்தவாறு பணி புரியலாம்" - தொலைதொடர்பு துறை அமைச்சகம் அறிவிப்பு

தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பி.பி.ஒ துறையை சேர்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள் இனி நிரந்தரமாக வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

Update: 2020-11-06 11:57 GMT
தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பி.பி.ஒ துறையை சேர்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள் இனி நிரந்தரமாக வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த துறையில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தும்  வீடுகளில் இருந்தபடியே நிரந்தரமாக பணி புரிய இனி முழு அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசின் தொலைதொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனங்களை பதிவு செய்யும் முறை மற்றும் ஊழியர்கள் தொடர்பான விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன. இது தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்