நவராத்திரி விழா : சாமி சிலைகளை பாதயாத்திரையாக கொண்டு செல்ல அனுமதி - தமிழக, கேரள அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சாமி சிலைகளை வழக்கம் போல் பாதயாத்திரையாக கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது,.

Update: 2020-10-13 03:50 GMT
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு கன்னியாகுமரியில் இருந்து தேவாரக்கெட்டு சரஸ்வதி, குமாரகோவில் முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை ஆகிய சுவாமி சிலைகள் தமிழக-கேரள காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையோடு  பாதயாத்திரையாக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.  ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக, சிலைகளை பாதயாத்திரையாக கொண்டு செல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது,, இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, கேரளா அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்  மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள்  உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்,.  அப்போது எப்போதும் போல பாதயாத்திரையாகவே சுவாமிசிலைகளை கொண்டு செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது,. ஆனால்  சாமிசிலைகள் செல்லும் போது வரவேற்பு நிகழ்ச்சிகள் எதுவும் கூடாது எனவும் பொதுமக்கள் கூடி நிற்க கூடாது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவையொட்டி,  நாளை பத்மநாபபுரத்தில் இருந்து மூன்று சிலைகளும் பல்லக்குகளில் பாதயாத்திரையாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்