ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த கேரள இளைஞர் - இந்தியா, ஈராக்கிற்கு எதிராக தாக்குதல் நடத்த சதிதிட்டம்

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து, இந்தியா, ஈராக்கிற்கு எதிராக தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டிய கேரள இளைஞரை குற்றவாளியென என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2020-09-26 10:39 GMT
ஐ.எஸ். பயங்கரவாத இயக்க செயல்பாடு தொடர்பாக 2016-ல் தேசிய புலனாய்வு பிரிவு மேற்கொண்ட சோதனையில் இடுக்கியை சேர்ந்த இளைஞர் சுபாஹனி ஹாஜா மொய்தீன் சிக்கினார். இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர், ஈராக் சென்று ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்று போரில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும், இந்தியா திரும்பியதும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் என்றும் இந்தியா மற்றும் ஈராக் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தார் என்றும் தெரியவந்தது. இவ்வழக்கை விசாரித்து வந்த கொச்சி தேசிய புலனாய்வு பிரிவு நீதிமன்றம், இந்தியா, ஈராக் அரசுக்கு எதிராக போர் தொடுக்க சதி திட்டம் தீட்டிய வழக்கில் சுபாஹனியை குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிக்காள தண்டனை திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்