இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து - மனைவி கண்முன்னே கணவர் உயிரிழந்த சோகம்
புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் மனைவி கண்முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
பண்ருட்டியை அடுத்த தெங்கானூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது மனைவியுடன் வில்லியனுருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். புதுச்சேரி கல்மண்டபம் அருகே சாலை வளைவில் திரும்பும் போது இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.