Dindugal | Bear Attack | Dog | ஓனரை தாக்கிய கரடியை ஓட ஓட விரட்டி கதறவிட்ட 2 வளர்ப்பு நாய்கள்

Update: 2025-12-08 04:19 GMT

வத்தலகுண்டு அருகே பா.விராலிப்பட்டியில் விவசாயியை கரடி தாக்கிய நிலையில், 2 வளர்ப்பு நாய்களால் அவர் உயிர் தப்பினார். விவசாயி சேகர் என்பவர் தோட்டத்தில் வேலைப்பார்த்துக் கொண்டு இருந்தபோது அங்குவந்த கரடி அவரை தாக்கி தொடையில் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அலறி துடித்த அவரின் கூச்சலைக் கேட்டு அவரின் 2 வளர்ப்பு நாய்கள் தோட்டத்திற்குள் ஓடிவந்து கரடியுடன் சண்டையிட்டு துரத்தி அவரை காப்பாற்றின. படுகாயங்களுடன் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விவசாயியை தாக்கிய கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்