இம்மாத இறுதியில் டிரம்பை சந்திக்க இஸ்ரேலிய பிரதமர் திட்டம்
ஜெருசலேமில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இம்மாத இறுதியில் சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஜெர்மன் சான்சலர் பெட்ரிக் மெர்ஸுடன் (Friedrich Merz) செய்தியாளர் சந்திப்பின் போது நெதன்யாகு இதனை தெரிவித்தார். காசா போர் நிறுத்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவில் தொடங்குவது குறித்தும், ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தும் டிரம்ப்புடனான சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என்று நெதன்யாகு கூறினார்.