தரையிறங்கும் போது விமானத்தின் டயர் சுழலாததே விபத்திற்கு காரணம் - முதல் கட்ட விசாரணையில் தகவல்

விமானத்தின் சக்கரம் சுழலாததால், தரையிறங்குவதில் பிரச்சினை ஏற்பட்டதாக டிஜிசிஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2020-08-08 06:36 GMT
விமானத்தின் சக்கரம் சுழலாததால், தரையிறங்குவதில் பிரச்சினை ஏற்பட்டதாக டிஜிசிஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கோழிக்கோடு விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில், 16 பேரின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன், சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனிடையே, இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டதில் சில தகவல்கள் தெரியவந்துள்ளது. தரையிறங்கும் போது, விமானத்தின் சக்கரம் சுழலாமல், முழு வேகத்தில் வந்ததே பிரச்சினைக்கு காரணம் என டிஜிசிஏ கூறியுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் வைக்கப்பட்டள்ள இறந்தவர்களின் சடலங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிவுகள் வந்த பிறகு, உறவினர்கள் ஒப்படைக்கப்படும் என மலப்புரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்