டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

Update: 2020-07-03 11:47 GMT
இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது. குறுகிய காலத்தில், டிக்டாக் செயலி பிரபலமடைந்தது எப்படி என்பதை பார்ப்போம். லக்னோவை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவரான கரண் திரிபாதி, உணவு உண்ணும் போது தொடர்ந்து தும்மல் ஏற்பட்டதை, வீடியோவாக பதிவு செய்து டிக் டாக்கில், அதிக லைக்குகளை அள்ளினார். இதன் மூலம் இந்தியாவில் பிரபலமானது டிக் டாக் செயலி. 2020 பிப்ரவரியில் மட்டும் உலகெங்கும் சுமார் 11 கோடியே, 3 லட்சம் முறை டிக் டாக் செயலி, தரவிறக்கம் செய்யப்பட்டது . இதனால் பிபரவரி மாதத்தில் மட்டும் டிக்டாக் நிறுவனத்திற்கு, பயனாளிகளினால் அதிகளவினால், வருவாய் கிடைத்தது. (gfx in 3 ) சென்ற ஆண்டின் பிப்ரவரியுடன் ஒப்பிடும் இது, 784 புள்ளி 2  சதவீதம் அதிகம் ஆகும். டிக்டாக் செயலியின், பயனாளிகளில் 41 புள்ளி மூன்று  சதவீதத்தினர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இது வரை உலக அளவில் டிக்டாக் செயலி, 190 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு, இதை தடை செய்துள்ளதால், டிக்டாக்கின் வளர்ச்சி பெரிய அளவில் தடைபட்டு, வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்று கணிக்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்