நாடு முழுவதும் நாளை முதல் ரயில் சேவை தொடக்கம் - டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி

நாடு முழுவதும் நாளை முதல் ரயில் சேவை துவங்கப்படும் நிலையில், இன்று மாலை ரயில்வே புக்கிங் இணையதளம் முடங்கியதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Update: 2020-05-11 17:31 GMT
ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயில் சேவை நாளை மீண்டும் தொடங்குகிறது. டெல்லியில் இருந்து, மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் 30 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள் அனைத்தும், சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று, மாலை 4 மணிக்கு தொடங்கியது . ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றதால் ரயில்வே புக்கிங் இணையதளம் முடங்கியது. இதனால் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். இதன்பின்னர் மாலை 6 மணி முதல் முன்பதிவு தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்